இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டின் டெசி கேர்ள் பிரியங்கா சோப்ராவிற்கு அடித்துள்ளது ஹாலிவுட் வாய்ப்பு. ரெஸ்ட்லிங் சாம்பியன் மற்றும் ஹாலிவுட் நடிகர் டுவானே ஜான்சன் மற்றும் ஜேக் எப்ரானுடன் 'பேவாட்ச்' எனும் ஹாலிவுட் படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவிற்கு அழைப்பு வந்துள்ளது.
சமீபத்தில் அமெரிக்கக டிவி சீரியலான குவான்டிகோவில் நடித்ததன் மூலம் சிறந்த புதுமுக நாயகி விருதை 'பீப்பள் சாய்ஸ் விருது' விழாவில் வென்றார். அதனைத் தொடர்ந்து ஹாலிவுட் பட வாய்ப்புகள் வரும் என்ற எதிரிப்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் ராக் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஹாலிவுட் அதிரடி ஹீரோ டுவானே ஜான்சனின் புதிய படமான 'பே வாட்ச்' திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.
1990ம் ஆண்டு வெளிவந்த டிவி சீரியலான பே வாட்ச்சைத் தழுவியே திரைப்படம் தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிப்பது பற்றி பிரியங்கா தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அவர் இந்த திரைப்படத்தில் நடிப்பார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. அவ்வாறு நடக்கும் பட்சத்தில், பிரியங்கா சோப்ராவின் முதல் ஹாலிவுட் திரைப்படமாக பே வாட்ச் திரைப்படம் அமையும் என்பதில் சந்தேகமில்லை. தீபிகாவா, பிரியங்காவா யாரோட ஹாலிவுட் படம் முதல்ல ரிலீசாகுமுன்னு தெரியலையே?