'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
வேதாளம் படத்தை அடுத்து அஜித் நடிக்கும் படம் எது என்பதற்கான அதிகாரபூர்வமான செய்தி இதுவரை இல்லை. என்றாலும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் காதுக்கு வருகின்றன. வேதாளம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது தன் அடுத்தப் படம் குறித்து அஜித் தீர்மானமான முடிவு எதையும் எடுக்கவில்லை.
அதேநேரம் தன்னுடைய அடுத்தப் படம் சத்யஜோதி பிலிம்ஸ் என்று மட்டும் முடிவு செய்துவிட்ட அஜித், சில கோடிகளை அட்வான்ஸாகவும் வாங்கிவிட்டார். ஆனால் இயக்குநர், கதை இன்ன பிற விஷயங்களை தீர்மானிக்கவில்லை.
இந்நிலையில், வேதாளம் படம் சூப்பர்டூப்பர் ஹிட்டானது. எனவே அதே காம்பினேஷனில் அடுத்தப் படம் வந்தால் பெரிய அளவில் பிசினஸ் பண்ணலாம் என்று சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் விருப்பம் தெரிவித்தாராம்.
அதில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்ட அஜித், அடுத்தப் படத்தை இயக்கும் வாய்ப்பையும் சிவாவுக்கே வழங்கி இருக்கிறார்.
சிவாவுக்கு உள்ள உடலியல் ரீதியிலான பிரச்சனை காரணமாக அவர் சில மாதங்கள் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டி இருந்ததாம். அதை முடித்துவிட்டு, பின்னர் ஸ்கிரிப்ட் வொர்க், ப்ரீ புரடக்ஷன்ஸ் எல்லாம் முடித்து ஜூன் மாதம்தான் படப்பிடிப்பு செல்ல முடியும் என்று சொல்லி இருக்கிறார் சிவா. அதற்கு அஜித் மற்றும் தயாரிப்பாளர்கள் ஓகே சொல்லிவிட்டனர்.
ஆக... அஜித்தின் அடுத்தப் படம் ஜூன் மாதம் தொடங்குகிறது..