‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஹாலிவுட்டின் பிரபல ராக் அன்ட் ரோல் ஜாம்பவான் டேவிட் போவி நேற்று காலமானார். அவருக்கு வயது 69. கடந்த 18 மாதங்களாக கடுமையான கேன்சருடன் போராடி வந்த டேவிட் போவி நேற்று தனது இன்னுயிரை நீத்தார். இந்தச் சம்பவம் உலக ராக் அன்ட் ரோல் ரசிகர்களையும், ஹாலிவுட் நட்சத்திரங்களையும் சோகக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
லண்டனில் உள்ள பிரிக்ஸ்டன் எனும் இடத்தில் ஜனவரி 8, 1947ம் ஆண்டு பிறந்தார். கடந்த 40 வருடங்களாக இசைக்காக அரும்பணியாற்றி வந்தார் இவர். 1969ம் ஆண்டு இவருக்கு 'ஸ்பேஸ் ஒடிட்டி' பாடல் மூலம் முதல் வெற்றிக் கிடைத்தது. இந்த மாதம் 8ம் தேதி தனது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 'பிளாக்ஸ்டார்' எனும் ஆல்பத்தை தனது கேன்சரையும் பொருட்படுத்தாது ரிலீஸ் செய்தார்.
உலகம் முழுவதும் ராக் அன்ட் ரோல் என்ற இசையால் பல ரசிகர்களை ஈர்த்து வந்தவர் டேவிட் போவி. த ரைஸ் அன்ட் ஃபால் ஆப் ஸ்டார்டஸ்ட், ஸ்பைடர்ஸ் ப்ரம் மார்ஸ், சேஞ்சஸ், ஹீரோஸ், யங் அமெரிக்கன்ஸ், லெட்ஸ் டேன்ஸ் போன்ற பல பிரபலமான பாடல்களை உலகத்துக்கு தந்த சொந்தக்காரர் இவர். டேவிட் போவி தனது வாழ்நாளில் மொத்தம் 140 மில்லியன் ரெக்கார்ட்களை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்துள்ளார். ரோலிங் ஸ்டோன் நிறுவனத்தால் சிறந்த 100 கலைஞர்கள் பெயர் பட்டியலில் 39வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட் மட்டுமின்றி இசை உலகமே அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றது.