தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
தூம்-2, கிரிஷ் வரிசை படங்களின் மூலம் பாலிவுட்டின் சூப்பர்மேன் நடிகரான ஹிரித்திக் ரோஷன் நேற்று தனது 42வது பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடினார். பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கான், பாஜிராவ் நாயகன் ரன்வீர் சிங், விவேக் ஓபராய், அமிஷா பாட்டேல், கரன் ஜோகர், மிகா சிங், ப்ரீத்தி ஜிந்தா என்று பாலிவுட் பட்டாளமே வோர்லி ஹோட்டலில் நடந்த ஹிரித்திக்கின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக நடந்த தனது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தை மேலும் பிரம்மாண்டமாக ஆக்க, தனக்குத் தானே மிக விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசாக வழங்கிக் கொண்டார் ஹிரித்திக் ரோஷன்.
தனது இரு மகன்களான ஹிரிஹன் மற்றும் ஹிரிதன் ஆகியோரை சமீபத்தில் ஆட்டோ சவாரி செய்ய வைத்த தந்தை ஹிரித்திக் தற்போது தனது இரு மகன்களுடன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் சொகுசு சவாரியும் செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
சென்ற ஆண்டு முழுவதையும் தனது மொகஞ்சதாரோ படத்திற்காக ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன். மொகஞ்சதாரோ திரைப்படம் தனக்கு நல்ல இடத்தை பாலிவுட்டில் இந்த ஆண்டு பெற்றுத் தரும் என்று நம்புகிறேன் என்றும் ஹிரித்திக் தெரிவித்துள்ளார்.