ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா |
ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. அந்த அரிய வாய்ப்பு கிடைத்தாலும் மூன்று அல்லது நான்கு படங்களுக்கு மேல் தாக்குபிடிக்க முடியாது. ஆனால் டேனியல் கிரெய்க் இனி ஜேம்ஸ்பாண்டாக நடிக்க மாட்டேன் என்று அவராகவே அறிவித்திருக்கிறார்.
அவர் நடித்த கேசினோ ராயல், குவாண்டம் ஆஃப் சோலஸ், ஸ்கைபால், தற்போது வெளிவந்த ஸ்பெக்டர் அனைத்துமே வெற்றிப் படங்கள்தான். என்றாலும் ஜேம்ஸ் பாண்டாக நடித்து போரடித்து விட்டது என்கிறார் டேனியல் கிரெய்க்.
இதுபற்றி அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது: ''இனி ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் எண்ணம் இல்லை. அதற்கான காலம் முடிந்து விட்டதாக நினைக்கிறேன். அதிலிருந்து முழுமையாக விலகிச் செல்ல நினைக்கிறேன். ஜேம்ஸ் பாண்ட் கேரக்டருக்காக உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறேன். இனியும் அப்படித்தான் நடிக்கச் சொல்வார்கள். அதற்கு நான் தயாராக இல்லை. புதிய ஜேம்ஸ் பாண்டை தேடுவார்கள். கிடைக்காவிட்டால் என்னிடம்தான் வருவார்கள். இனி நான் ஜேம்ஸ் பாண்டாக நடித்தால் அது பணத்துக்காக நடிப்பதாகத்தான் இருக்கும். என்று டுவிட்டரில் எழுதியிருக்கிறார் டேனியல்.