இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சிவாஜி பேரன் துஷ்யந்த் புதிதாக ஆரம்பித்துள்ள ஈஷான் புரொடக்ஷன் சார்பில் தயாரிக்கும் முதல் படம் 'மீன் குழம்பும் மண்பானையும்'. இதில் ஜெயராம் மகன் காளிதாஸ், பிரபு, ஆஷ்னா ஜவேரி, ஊர்வசி, நடிக்கிறார்கள். டி.இமான் இசை அமைக்கிறார். லக்ஷ்மண் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். புதுமுகம் அமுதேஷ்வர் இயக்குகிறார்.
இது ஒரு கலகல காமெடி படம். இதில் ஒரு டெரரான அதாவது நவீன சொர்ணாக்கா மாதிரி ஒரு லேடி தாதா கேரக்டர் இருக்கிறது. இதில் நடிக்க சிம்ரன் உள்ளிட்ட மாஜி ஹீரோயின்கள் பலரிடம் பேசினார்கள். தற்போது அந்த கேரக்டரில் பூஜா குமார் நடித்து வருகிறார். இதற்காக அவர் கடந்த ஒருவாரமாக ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு முன் தாதாவாக நடித்த நடிகைகளின் படங்கள், கமலஹாசன் தாதாவாக நடித்த படங்களை பார்த்து வருவதோடு, சண்டை பயிற்சியும் எடுத்து வருகிறார். ஆண்களில் பிரகாஷ்ராஜ், ரகுவரன், மாதிரி பெண்களில் பக்காவான வில்லியாக மாற வேண்டும் என்பதுதான் பூஜாவின் ஆசையாம். இதற்காக கடுமையாக உழைத்து வருகிறார்.