தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
புலி படத்தயாரிப்பாளர்களில் ஒருவரான சிபு தமீம்ஸ் தயாரிக்கும் புதிய படம் 'இரு முகன்'. அரிமா நம்பி படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்குகிறார். நயன்தாரா ஹீரோயின். நித்யா மேனன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.
படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் விக்ரம் இயந்திர மனிதன் மற்றும் சதாரண மனிதன் கலந்த கலவையாக சித்தரிக்கப்பட்டுள்ளார். பின்னணியில் விஞ்ஞான ஆய்வுக்கூடம் உள்ளது. சயின்ஸ் பிக்சன் கலந்த பேண்டஸி படம் என்பதை பர்ஸ்ட் லுக் உறுதிப்படுத்துகிறது. முதல்கட்ட படப்பிடிப்புகள் மலேசியாவில் நடக்கிறது. இரண்டாவது கட்ட படப்பிடிப்புகள் சென்னையிலும், மூன்றாம் கட்ட படப்பிடிப்புகள் வெளிநாட்டில் பாடல் காட்சிக்காகவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.