தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
டோலிவுட்டின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுன் நடித்து வரும் சரைனொடு எனும் ஆக்ஷன் திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பை ஜனவரி 24ல் துவங்க திட்டமிட்டுள்ளார். இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். இந்நிலையில் சரைனொடு படத்தின் பாடல்களை பிப்ரவரி மாதத்தில் வெளியிட இயக்குனர் ஆர்வம் காட்டி வருகின்றார். பாடல்கள் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. வெளிநாட்டில் இவ்விழாவை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு லட்சம் ரசிகர்கள் விழாவில் கலந்து கொள்ளும் அளவில் பிரம்மாண்டமாக விழாவை நடத்தவுள்ளதாகவும் படப்பிடிப்பு தள தகவல்கள் கூறுகின்றன. இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் பொங்கலுக்கு வெளிவரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் பாடல்கள் வெளியீடு குறித்த செய்திகளும் வெளிவந்துள்ளதால் உற்சாகமடைந்துள்ள அல்லு அர்ஜுன் ரசிகர்கள் படம் விரைவில் திரைக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் கேத்ரின் திரைஷா நாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் ஆதி வில்லனாக நடிக்கின்றார்.