பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
கலைஞர் தொலைக்காட்சியில் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் ராமானுஜர் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. நாத்திகரான தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள ஆன்மீக தொடர் என்பதால் நல்ல வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. வைஷ்ணவி மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் குட்டி பத்மினி இயக்கி, தயாரித்துள்ளார். சின்னத்திரை தொகுப்பாளர் கவுசிக் ராமானுஜராக நடித்து வருகிறார்.
இதனை தெலுங்கில் டப் செய்து ஒளிபரப்பும் உரிமையை திருப்பதி திருமலை தேவஸ்தானம் வாங்கியுள்ளது. அந்த உரிமையை எந்த பணமும் பெற்றுக் கொள்ளாமல் வழங்கி உள்ளார் கருணாநிதி. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி சாம்பசிவராவ் கூறியதாவது:
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய ரமானுஜர் தொடர் கலைஞர் டி.வியில் ஒளிபரப்பாகி வருகிறது. ராமாஜனரின் வாழ்க்கையை சொல்லும் இந்த தொடரை அனைவரும் விரும்பி பார்க்கிறார்கள். இந்த தொடரை தெலுங்கில் டப் செய்து திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் சேனலில் ஒளிபரப்ப முடிவு செய்தோம். இதற்காக கருணாநிதியை அனுகியபோது எந்த கட்டணமும் பெற்றுக் கொள்ளாமல் ஒப்புதல் தந்தார். இந்த தொடர் தேவஸ்தான சேனலில் தொடர்ந்து ஒளிபரப்பாகும் என்றார்.