ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நாடோடிகள் படத்தில் அறிமுகமான அபிநயா, இப்போது தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கில படங்களில் நடித்து வருகிறார். அபிநயா சோலோ ஹீரோயினாக நடித்து வரும் படம் 'அடிடா மேளம்'. இதில் அபய் கிருஷ்ணா, ஜெயபிரகாஷ், ஊர்வசி, மயில்சாமி, நடிக்கிறார்கள். அபிஷேக் இசை அமைக்கிறார், அன்பு ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார்.
அபய் கிருஷ்ணா திருமணங்களை நடத்தி தரும் நிறுவனம் நடத்துகிறார். அவருக்கு அபிநயா, விபு திருமணத்தை நடத்தி வைக்கும் காண்டிராக்ட் கிடைக்கிறது. திருமண ஏற்பாடுகள் நடக்கும்போது அபிநயா திடீரென திருமணத்தை நிறுத்தச் சொல்லி பெரும் பணம் கொடுக்கிறார். எப்படியாவது திருமணத்தை நடத்தச் சொல்லி விபு பணம் கொடுக்கிறார். இரண்டு பேரிடமும் பணத்தை வாங்கிக் கொண்டு அபய் கிருஷ்ணா நடத்தும் கலாட்டாக்களை காமெடிய சொல்கிற படம். முதலில் மேளதாளம் என்று பெயர் வைத்திருந்தார்கள். இப்போது அடிடாமேளம் என்று மாற்றி இருக்கிறார்கள்.