தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமூக அக்கறையுடன் செயல்படும் நடிகர்களில் முக்கியமானவர் சூர்யா. அகரம் பவுண்டேஷன் மூலம் கல்வி பணி ஆற்றியவர் இப்போது ஏரியை தூர்வாரும் களப்பணிக்கும் திரும்பி இருக்கிறார். தான் ஆரம்பித்த படத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பெண்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் 36 வயதினிலே படத்தை தயாரித்தார். குழந்தைகளின் உரிமை பேசும் பசங்க 2 படத்தை தயாரித்தார். படம் பெரிய அளவில் வசூலை குவிக்கவில்லை என்றாலும் நல்ல படத்தை இயக்கிய பாண்டிராஜுக்கு கார் பரிசளித்து மகிழ்ந்தார்.
இப்போது சூர்யாவின் அடுத்த அதிரடி. இன்று முதல் பசங்க 2 படம் ஓடும் தியேட்டருக்கு சென்று 10 வயதுக்குட்டபட்ட பசங்க படத்தை இலவசமாக பார்க்கலாம். இந்த திட்டம் முதல் கட்டமாக கோவை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்னாற்காடு திரையரங்குகளில் அமுல்படுத்தப்படுகிறது. பின்னர் மற்ற பகுதி தியேட்டர்களுக்கும் விரிவு படுத்தப்பட இருக்கிறது.