பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஷிரிஷ், பாபி சிம்ஹா, சென்ட்ராயன், யோகிபாபு உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் - மெட்ரோ. விதார்த் நடித்த ஆள் படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் என்பவர் மெட்ரோ படத்தை இயக்கி, தயாரித்தும் இருக்கிறார். உதயகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜோஹன் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஹெல்மெட் அணிந்து கொண்டு பெண்களின் நகைகளைத் அறுப்பவர்களை பின்னணியாக வைத்து இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ படத்தில் பாபி சிம்ஹா வில்லன் வேடம் ஏற்றிருக்கிறார். கதாநாயகனாக நடித்திருப்பவர் புதுமுகம் ஷிரிஷ். இவரது அப்பா கனிமொழியிடம் பி.ஏ.வாக இருக்கிறாராம். மகனின் நடிப்பு ஆர்வத்தை தெரிந்து கொண்டு மெட்ரோ படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். மெட்ரோ படத்திற்காக கானா பாலா பாடிய 'பூமி' என்ற பாடல், அதாவது சிங்கிள் டிராக் நேற்று வெளியிடப்பட்டது. ஷிரிஷின் வீட்டுக்கே சென்று மெட்ரோ படத்தின் சிங்கிள் டிராக்கை வெளியிட்டிருக்கிறார் நடிகர் கார்த்தி.