'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
தனுஷும் சிம்புவும் நண்பர்களாக இருப்பதுபோல் வெளியே காட்டிக் கொண்டாலும் உண்மையில் இருவருக்கும் இடையில் நட்பு இல்லை என்றே அவர்களுக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். பீப் சாங் விவகாரத்தில் அனிருத்தை சிக்க வைத்ததால் சிம்பு மீது மேலும் கடுப்பில் இருக்கிறாராம் தனுஷ். இருவருக்கும் இடையில் உள்ள விரோதம் நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை(அதிகாரப்பூர்வமற்ற தலைப்பு ரயில் என்று சொல்லப்படுகிறது)பெயர் அறிவிப்புடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்கை பொங்கல் அன்று வெளியிட இருப்பதாக தனுஷ் அறிவித்திருந்தார். உடனே சிம்புவும் தன் பங்குக்கு அச்சம் என்பது மடமையடா படத்தின் சிங்கிள் ட்ராக்கை அதே பொங்கல் தினத்தில் வெளியிட உள்ளதாக அறிவித்திருக்கிறார்.