‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
இளம் ஹீரோக்களில் ஆர்யா கலகலப்பானவர். சக ஹீரோக்களுடன் எவ்வித பொறாமையும் இல்லாமல் உள்ளன்புடன் கூடிய நட்புடன் பழகுவதில் ஆர்யாவை மிஞ்ச ஆளில்லை. ஆர்யாவின் வருகைக்குப் பிறகே இளம் ஹீரோக்கள் மத்தியில் ஆரோக்கியமான நட்புணர்வு தலைதூக்கியதோடு, ஒருவரையொருவர் வாடா போடா என்று பேசிக்கொள்ளும் அளவுக்கு நடிகர்களுக்குள் நட்பு வட்டம் உருவானது. தனக்கு மிகவும் நெருக்கமான ஹீரோக்கள் என்றால் சினிமா விழாக்களில் பேசும்போது கூட அவர்களை செமத்தியாய் கலாய்ப்பார்.
அவன் இவன் படத்தில் நடித்தபோது உடன் நடித்த விஷாலைப் பற்றி பேசும்போது ஆர்யா கலாய்த்ததை யாருமே மறக்க மாட்டார்கள். அதேபோல் இன்று நடந்த பெங்களூர் நாட்கள் படத்தின் பிரஸ்மீட்டிலும் செம ஜாலியாய் பேசினார் ஆர்யா. பெங்களூர் நாட்கள் படத்தில் ஆர்யா உடன் தெலுங்கு நடிகர் ராணா டக்குபட்டியும் நடிக்கிறார்.
அவரைப் பற்றி பேசும்போது, முன்னாள் காதலிகளைப் பற்றிய நினைவுப்பொருட்களை நாமெல்லாம் ஒரு ரூமில்தான் வைத்திருப்போம். ராணா தன்னுடைய முன்னாள் காதலிகளைப் பற்றிய நினைவுப்பொருட்களை வைக்க வேண்டும் என்றால் ஒரு மியூசியம்தான் கட்ட வேண்டும் ஆர்யா ஜாலியாகப் பேசி ராணாவைக் கலாய்த்தார். ஆர்யாவின் பேச்சைக் கேட்டு சற்றே ஜெர்க்கானாலும் அவரது பேச்சை கைதட்ட ரசித்தார் ராணா.