Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தோல்வியை ஒப்புக் கொண்ட ஆர்யா

07 ஜன, 2016 - 10:05 IST
எழுத்தின் அளவு:
Arya-agree-his-failure

ஆர்யா முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தாலும் அவரது கேரியர் கிராஃபை சற்றே உற்றுப்பார்த்தால் அவர் வெற்றிப்படங்களைக் கொடுத்து நீண்ட காலமாகிறது என்ற உண்மையை புரிந்து கொள்ளலாம். அவர் ஹீரோவாக நடித்த படங்களில் கடைசியாக வெற்றிபெற்ற படம் ராஜாராணி. அட்லீ இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்துக்குப் பிறகு ஆர்யா நடித்த பல படங்கள் வெற்றியடையவில்லை. அது மட்டுமல்ல, 2014 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான இரண்டாம் உலகம், மீகாமன் என இரண்டு படங்களும் படு தோல்வியடைந்தன.


2015 ஆம் ஆண்டு அவருக்கு இன்னும் மோசமாக ஆண்டாக அமைந்தது. ஆர்யா நடித்த, புறம்போக்கு, வாசுவும் சரவணனும் ஒண்ணாப்படிச்சவங்க, யட்சன், இஞ்சி இடுப்பழகி என நான்கு படங்களுமே தோல்விதான். இத்தனை தோல்விப்படங்களைக் கொடுத்தாலும் ஆர்யா அப்செட்டாகவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.


பெங்களூர் நாட்கள் படத்தின் பிரஸ்மீட்டில் பேசிய ஆர்யா, 2015 ஆம் ஆண்டைப் பற்றி குறிப்பிட்டபோது, பர்சனல் லைஃபில் சந்தோஷமான வருடம்... புரபஷனலாக நிறைய ப்ளாப் கொடுத்த வருஷம் என்று கேஷூவலாக குறிப்பிட்டார். வெற்றிப்படம் கொடுக்கும்போது தலைக்கனம் பிடித்து ஆடுவதும் இல்லை... தோல்விப்படம் கொடுக்கும்போது துவண்டுபோவதும் இல்லை என்றார்.


தட் இஸ் ஆர்யா...!


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in