தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
நான்வெஜ் சாப்பிடுபவராக இருந்த பார்வதியை ஒரு கடல் பயணம் தீவிரமான வெஜிடேரியனாக மாற்றிவிட்டது என்றால் நம்ப முடிகிறதா..? ஆனால் அதுதான் உண்மை. 'என்னு நிண்டே மொய்தீன்' படத்தில் நடிக்கும் வரை அசைவ உணவுகளை வெளுத்துக்கட்டுபவராகத்தான் இருந்தார் 'பூ'போன்ற மரியான்' பார்வதி. அதன்பின் ஒருமுறை கடல் பயணமாக பின்லாந்துக்கு சென்றார் பார்வதி. அப்போது அந்த கப்பல் பயணத்தில் பார்வதிக்கு அறிமுகமானவர் தான் ஜான் மேக் ஆர்தர். பார்வதி முதலில் கவனித்தது அவர் அணிந்திருந்த பூட்ஸ்களைத்தான்.
காரணம் அதில் 'நான் ஒரு வெஜிடேரியன்' என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. விஷயம் புதிதாக இருக்கவே, அவரை ப்ரெண்ட் ஆக்கிக்கொண்ட பார்வதி, அது குறித்து அவரிடம் விளக்கம் கேட்டுள்ளார். கிட்டத்தட்ட ஐந்து மணி நேர நீண்ட உரையாடலில், வெஜிடேரியனின் மகத்துவத்தை தெளிவாக உணர்ந்து கொண்ட பார்வதி, அந்த நிமிடத்தில் இருந்தே வெஜிடேரியனாகவும் மாறிவிட்டாராம். அதுமட்டுமல்ல, பால் காபி, ஆம்லேட் போன்றவற்றை சாப்பிடுவதையும் தவிர்த்துவிட்டார். லெதெர் ஹேண்ட்பேக், பர்ஸை கூட உபயோகப்படுத்துவதில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.