'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
மிர்ச்சி சிவா- டாக்டர் சீனிவாசன் ஆகிய இருவரும் நாயகர்களாக நடித்து வரும் படத்தை சிம்மக்கல் சேகர் என்ற பெயரில் இயக்கி வந்தார் திரைவண்ணன். இவர் ஜீவா நடித்த கச்சேரி ஆரம்பம் என்ற படத்தை இயக்கியவர். இந்த படத்தில் மிர்ச்சி சிவா முக்கிய நாயகனாக நடிக்க, டாக்டர் சீனிவாசன், படத்துக்குள் எடுக்கப்படும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்கிறாராம். இன்றைய லேட்டஸ்ட் ஹீரோக்களையே மிஞ்சும் கலர் கலர் காஸ்டியூம்களில் கூலிங் கிளாஸ் கெட்டப்பில் படம் முழுக்க கலக்குகிறாராம் டாக்டர் சீனிவாசன்.
மேலும், இப்படத்தில் மிர்ச்சி சிவாவின் கேரக்டர் சிம்மக்கல் சேகர் என்பதை வைத்துதான் முதலில் படத்திற்கே சிம்மக்கல் சேகர் என்று வைத்திருந்தார் திரை வண்ணன். ஆனால், பின்னர் கதையில் ஏற்பட்ட சில திருத்தங்கள் காரணமாக, அந்த டைட்டீலை மாற்றம் செய்ய முடிவெடுத்து, பல டைட்டீல்களை யோசித்துக்கொண்டிருந்தார். இப்போது அப்படத்துக்கு அட்றா மச்சான் விசில் என்று புதிய டைட்டில் வைத்திருக்கிறார். அதோடு, இந்த படம் திரைக்கு வரும்போது படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் பார்க்கும் ரசிகர்கள் உற்சாகத்தில் விசில் அடித்து கொண்டாடுவார்களாம். அந்த அளவுக்கு படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் ரசிகர்களின் விருப்பத்தை உணர்ந்து படமாக்கியிருக்கிறாராம் திரைவண்ணன்.