பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஜுனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நன்னுக்கு பிரேமதோ படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்று தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மற்றும் டப்பிங் பணிகளும் நடைபெறுகின்றது. இப்படத்திற்காக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் முதன் முறையாக தெலுங்கில் டப்பிங் பேசுகின்றார். டப்பிங் பேசும் போது ராகுல் ப்ரீத்தி சிங் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அவர், டப்பிங் பேசுவது சுலபம் என்று யார் சொன்னது? ஆனால் எனக்கு பிடித்திருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார். ஜுனியர் என்.டி,ஆரும் இப்படத்திற்கான டப்பிங்கில் ஈடுபட்டுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ல் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் புரமோஷன் பணிகள் இன்னும் இரண்டு நாட்களில் துவங்கவிருப்பதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். பிவிஎஸ்என் பிரசாத் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.