அர்ஜுன் ரெட்டி 2ம் பாகம் தயாராகிறது | சதுரங்க வேட்டை இஷாரா நாயர் திருமணம் | யானை காதில் எறும்பு நுழைந்தால் என்னவாகும் : கமல் | மீண்டும் ஹீரோயினாக ஷாமிலி | 'வர்மா' படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பம் | செய்தி சேனல்களுக்குத் தடை? - தெலுங்குத் திரையுலகம் அதிரடி | சர்ச்சையைக் கிளப்பிய விஜய் தேவரகொன்டா டுவீட் | மீண்டும் கேரளாவுக்கு வருகிறார் சன்னி லியோன் | பாரபட்சம் காட்டுகிறார்கள் : அபர்ணா பாலமுரளி குமுறல் | பிரேமம் நடிகருக்கு வெளிச்சம் தருமா தொபாமா..? |
தேவதையைக் கண்டேன், திருவிளையாடல் புராணம், மலக்கோட்டை, காதல் சொல்ல வந்தேன், பட்டத்து யானை ஆகிய படங்களை இயக்கியவர் பூபதி பாண்டியன். தற்போது விமல் நடிக்கும் மன்னர் வகையறா என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சத்யராஜ் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார். தனது படங்களில் எப்போதுமே காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பூபதி பாண்டியன். இந்த படத்தில் காமெடிக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாராம். அதோடு, விமலுடன் சூரி நடித்த படங்களை மனதில் கொண்டு ஒரு காமெடி ட்ரேக் ரெடி பண்ணியிருக்கிறாராம்.
மன்னர் வழியில் வந்தவரான விமலின் குடும்பத்தில் நடக்கும் சில பிரச்சினைகள்தான் இந்த படமாம். ஆனால், விமலுடன் காமெடியனாக நடிக்க வேண்டிய சூரி, ரொம்ப பிசியாக இருப்பதால் இவர்கள் கேட்ட நேரத்தில் அவர் கால்சீட் கிடைக்கவில்லையாம். அதனால் அந்த வேடத்தில் இப்போது ரோபோ சங்கர் நடிக்கிறார். அதனால் சூரியுடன் பங்காளி கூட்டணி போட்டு நடித்து வந்த விமல், ரோபோ சங்கருடன் சில காட்சிகளில் சரியான காம்பினேசன் செட்டாகாமல் தடுமாறியபோது பின்னர் சுதாரித்துக்கொண்டு நடிக்க, இப்போது அவர்களின் காமெடி கூட்டணி சூப்பர் ஸ்கோர் பண்ணிக்கொண்டிருக்கிறார்களாம். அந்த வகையில், விமல் இதுவரை நடித்த படங்களில் இந்த படத்தில் அவரது காமெடிக்கு தியேட்டர்களில் பெரிய கைதட்டல் கிடைக்கும் என்கிறார்கள்.