டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
எந்திரன் படத்தில் வசீகரன், சிட்டி என்ற இரண்டு வேடங்களில் நடித்தார் ரஜினி. இதில் விஞ்ஞானியான வசீகரன், சிட்டி என்கிற எந்திரன் மனிதனை உருவாக்கி அவனுக்கு மனித உணர்வுகளை வரவைக்கிறார். அதையடுத்து அவன் வசீகரனின் காதலியான ஐஸ்வர்யாராய் மீது காதல் கொள்கிறான். அதன்பிறகு வசீகரனுக்கும், சிட்டிக்குமிடையே ஏற்படும் போர்தான் எந்திரன் படம்.
ஆனால், தற்போது உருவாகி வரும் எந்திரன் -2 வான 2.ஓ படத்தில் நடிக்கும் ஹீரோவான ரஜினி ரோபோவும், வில்லனாக அக்சய்குமார் ரோபோவும் மோதிக்கொள்வதுதான் கதையாம். அந்த வகையில், இரண்டு ரோபோக்களும் சண்டை செய்யும் பிரமாண்டமான காட்சியும் அப்படத்தில் உள்ளதாம். அமெரிக்காவில் முகாமிட்டு ரஜினி, அக்சய்குமார், எமிஜாக்சன் ஆகியோரை வைத்து ரிகர்சல் காட்சிகளை எடுத்தபோது, அந்த ரோபோ சண்டை காட்சியையும் படமாக்கி விட்டாராம் ஷங்கர். ஆக, பேய்க்கும் பேய்க்கும் சண்டை மாதிரி ரோபோவும் ரோபோவும் சண்டை போடுகிறதாம்.
அந்த வகையில், 2.ஓ படம் ஹாலிவுட்டுக்கு மிரட்டல் கொடுக்கும் வகையில் இருக்கும் என்கிறார்கள். அதோடு, இந்த படத்தில் நடிப்பவர்கள் இந்தியர்களாக இருந்தபோதும், டெக்னீசியன்களைப் பொறுத்தவரை பெரும்பாலானோர்கள் ஹாலிவுட் சினிமாவைச் சேர்ந்தவர்கள்தானாம். அதனால், 2.ஓ படம் முழுக்க முழுக்க ஹாலிவுட் பட பீலையே கொடுக்கும் என்றும் கூறுகிறார்கள்.