தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பீப் சாங் மாதிரி பெருகி வரும் ஆன்லைன் குற்றங்களை மையமாக கொண்டு உருவாயிருக்கும் படம் லென்ஸ். ஜெயபிரகாஷ் எழுதி, இயக்கி, நடித்துள்ளார். அவருடன் ஆனந்த் சாமி, அஸ்வதி, மிஷா கோஷல், ஆகியோரும் நடித்துள்ளனர். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படம் கோவாவில் நடந்த இந்தியன் பனோரமாவில் திரையிடப் பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. டில்லியில் நடந்த பயாஸ்கோப் குளோபல் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்றது. தற்போது சென்னையில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்படுகிறது. விரைவில் திரையரங்குகளிலும் வெளிவர இருக்கிறது.