நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? |
தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் முக்கியமானவர் நா.முத்துகுமார். இரண்டு தேசிய விருதுகளுடன் 11 ஆண்டுகளாக அதிக பாடல்களை எழுதியும், அதிக ஹிட் பாடல்களை கொடுத்தும் முதலிடத்தில் இருந்தார். இந்த ஆண்டு மதன் கார்க்கி முதல் இடத்தை பிடித்து நா.முத்துகுமாரின் சாதனையை முறியடித்துள்ளார்.
மதன் கார்க்கி 40 படங்களில் 97 பாடல்களை எழுதியுள்ளார். ஐ, பாகுபலி, வேதாளம், ரோமியோ ஜூலியட், மாஸ், வாலு, 10 எண்றதுக்குள்ள, ராஜதந்திரம், இஞ்சி இடுப்பழகி, பாஜிராவ் மஸ்தானி, பசங்க 2 படங்களின் பாடல்கள் ஹிட்டாகி உள்ளது.
இது தொடர்பாக மதன் கார்க்கி வெளிட்டுள்ள அறிக்கையில் "திரையுகில் இது எனக்கு 6வது ஆண்டு பரீட்சை முடிவை பெற்றோரிடம் காட்டும் மாணவனின் மனநிலையோடு இந்த இந்த ஆண்டு நான் எழுதிய பாடல்கள் பட்டியலை உங்களிடம் தருகிறேன். மொழியை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வதில் திரைப்பாடல்களின் பங்கு மிகப்பெரியது. பாடல்களில் நல்ல மொழியை நல்ல கருத்துக்களை கையாள்வது நல்ல சமுதாயத்தை உருவாக்கும். வரும் ஆண்டில் பாடல்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டு தரமான பாடல்களை எழுத முயற்சிக்கிறேன்" என்கிறார்.
நா.முத்துகுமார் : 33 படங்களில் 94 பாடல்களை எழுதியுள்ளார் நா.முத்துகுமார். 9 படங்களுக்கு முழு பாடல்களையும் எழுதியிருப்பது தனி சிறப்பான காரியம். நா.முத்துகுமார் விடுத்துள்ள அறிக்கையில் "12 ஆண்டுகளாக என்னை முன்னிறுத்தி வரும் ரசிகர்களுக்கு நன்றி. எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசை அமைப்பாளர்கள் தொழில்நுட் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி" என்று கூறியுள்ளார்.