Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

2016ல் குழந்தைகளை குஷிபடுத்த வரும் சூப்பர் அனிமேஷன் திரைப்படங்கள் ஒரு பார்வை!

01 ஜன, 2016 - 16:27 IST
எழுத்தின் அளவு:
Much-awaited-Animation-films-in-2016

ஹாலிவுட் திரைப்படங்களில் நிஜ காதாபாத்திரங்கள் நடித்து வெளியாகும் பிரம்மாண்ட திரைப்படங்களுக்கே சவால் விடும் நிலையில் ஹாலிவுட்டின் அனிமேஷன் திரைப்படங்களும் தங்களின் ஆட்சியை உலகம் முழுவதும் செய்து தான் வருகிறது. அதில் மிக முக்கியமான குங்ஃபூ பாண்டா, ஐஸ் ஏஜ், ஃபைண்டிங் நீமோ அனிமேஷன் திரைப்படங்கள் உலகளவில் தங்களுக்கான தனி ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்து வைத்துள்ளது.


இந்த மூன்று படங்களின் அடுத்த பாகங்கள் இந்த 2016 ஆண்டில் வெளிவர உள்ளது குழந்தைகளுக்கு மட்டுமின்றி அனிமேஷன் திரைப்படங்கள் பார்க்கும் அத்தனை ரசிகர்களுக்கும் மிகப்பெரிய விருந்து என்றே சொல்லலாம். எந்த வித ஆபாசமும் இன்றி, அழகான பொம்மைகளின் அட்டகாசங்கள் மனதில் நல்ல எண்ணத்தையும் குழந்தைத் தனத்தையும் விதைக்கும் என்பதில் சந்தேகமில்லை.


த குங்ஃபூ பாண்டா-3


ட்ரீம் வொர்க்ஸ் அனிமேஷன் மற்றும் 20த் செஞ்சுரி பாக்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கப்படும் த குங்ஃபூ பாண்டா-3ம் பாகம் இந்த ஆண்டின் தொடக்கத்திலே வெளிவர காத்திருக்கிறது. ஜனவரி 29ம் தேதி உலகம் முழுவதும் பாண்டா கரடியின் காமெடி அட்டகாசம் உலகின் அனைத்து குழந்தைகளையும் குஷிப்படுத்த வருகிறது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லர் அனைவரையும் கவர்ந்து வருகிறது. கரடிக்காக காத்திருக்கிறது ஒரு பெரிய குட்டீஸ் கூட்டம்.


த ஆங்கிரி பேர்ட்ஸ்


ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் விளையாட்டாக வந்து உலக அளவில் வசூல் சாதனையை நிகழ்த்தி, பல கோடி ரசிகர்களை தன் வசம் ஈர்த்த த ஏங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டை மையமாக வைத்து அதே பெயரில் த ஆங்கிரி பேர்ட்ஸ் படமும் உருவாகி விட்டது. இந்த ஆண்டு மே 20ம் தேதி கோடை விடுமுறை கொண்டாட்டத்தில் குழந்தைகளை கவர வருகிறது இத்திரைப்படம். சோனி பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட இருக்கும் ஆங்கிரி பேர்ட்ஸ் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் உள்ளன.


ஐஸ் ஏஜ்: கொலிசன் கோர்ஸ்


ஐஸ் ஏஜ் திரைப்படம் தனது 5வது பாகமான கொலிசன் கோர்ஸ் படத்தை இந்த ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி திரையிட காத்திருக்கிறது. பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் முந்தைய படங்களை காட்டிலும் கூடுதல் மெனக்கெடல் போட்டு அனிமேஷன் வேலைகளை செய்துள்ளனராம் படக்குழுவினர். விண்வெளி உடையில் படத்தின் பிரபல கதாபாத்திரமான ஸ்க்ராட் செய்யும் அட்டகாசத்தை டிரைலரில் கண்ட ரசிகர்கள் அதன் ரிலீசுக்கு வெய்ட் பண்றாங்க..




ஃபைன்டிங் டோரி


பிக்ஸார்ச் தயாரிப்பில் 2003ல் வெளியான அனிமேஷன் திரைப்படம் ஃபைன்டிங்க் நிமோ. இந்த படத்தைப் பார்க்காத ஆட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு உலகளவில் பேசப்பட்ட அற்புதமான அனிமேஷன் திரைப்படம். தனது மகளை காணவில்லை என்று பல கடல், பல பிரச்னைகளை தாண்டி, பல ஆபத்துகளை கடந்து தனது குட்டி மீனை ஒரு தாய் மீன் கண்டுபிடிக்கும் அட்டகாசமான திரைப்படம் தான் ஃபைன்டிங் நெமோ. அதன் தொடர்ச்சியான இந்த படத்திற்கு ஃபைன்டிங் டோரி என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தில் நெமோ டோரி என்ற தனது காதல் மீனை தேடுவதுதான் கதை. கடல்வாழ் உயிரினங்கள் மீனுக்கு உதவி செய்வதும் அது படும் பிரச்னைகள், சாகசங்கள் எல்லாம் மீண்டும் பார்க்க ஜூன் 17 வரை காத்திருக்கவேண்டும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in