ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலா இயக்கிய நந்தா படத்தில் லொடுக்கு பாண்டியாக சினிமாவில் அறிமுகமானவர் கருணாஸ். அந்த படத்தில் காமெடியனாக நடித்த அவர், தொடர்ந்து பாபா, வில்லன், திருடா திருடி, பிதாமகன், எந்திரன் உள்பட பல படங்களில் காமெடியனாகவே நடித்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கும் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதனால், திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பாணி, சந்தமாமா, ரகளை புரம் உள்பட சில படங்களில் ஹீரோவாக நடித்தார். அதோடு அடுத்தபடியாக ஹீரோவாக நடிப்பதற்கும் பத்துக்கும் மேற்பட்ட கதைகளை ஓகே பண்ணி வைத்திருந்தார்.
ஆனால், அவர் நடித்த ஓரிரு படங்களை தவிர மற்ற படங்கள் தோல்வியடைந்ததால், தொடர்ந்து ஹீரோவாக நடிப்பதை நிறுத்தி விட்டு மறுபடியும் காமெடியனாக டார்லிங், கொம்பன், மாஸ் என ரூட்டை மாற்றினார். இருப்பினும், தற்போது காமெடி மட்டுமின்றி குணசித்திர வேடங்களில் நடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார் கருணாஸ். அந்த வகையில், வருகிற 1-ந்தேதி திரைக்கு வரும் அழகு குட்டி செல்லம் படத்தில் ஆட்டோ டிரைவராக ஒரு குணசித்திர வேடத்தில் நடித்துள்ள கருணாஸ், அடுத்தடுத்து காமெடியை விட மனதை டச் பண்ணக்கூடிய குணசித்சிர வேடங்களில் அதிகமாக நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.