ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பழம்பெரும் நடிகரும், தயாரிப்பாளருமான பாலாஜி, சென்னையில் நேற்று (2ம்தேதி) மாலை காலமானார். தமிழ்த் திரையுலகில், "அவ்வையார்' படத்தில் முருகனாக நடித்து அறிமுகமானவர், பழம்பெரும் நடிகர் பாலாஜி (75). தொடர்ந்து, "படிக்காதமேதை, வசந்த மாளிகை, எங்கிருந்தோ வந்தாள், பலே பாண்டியா, அன்புக்கரங்கள்' உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் பிறமொழி படங்களில் கதாநாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். நடிகர் சிவாஜியுடன் 26 படங்களில் நடித்துள்ளார்.
"பில்லா, விடுதலை, தீ, நீதி, தியாகம்' உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங் களை தயாரித்து வெளியிட்டார். கடந்த 1934ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி சென்னையில் பிறந்தவர் பாலாஜி. தந்தையின் பெயர் கிருஷ்ணமாச்சாரி. எழும்பூரில் வசித்து வந்த இவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். மகன் சுரேஷ் பாலாஜி சினிமாத் துறையில் உள்ளார். மகள் சுசித்ராவை நடிகர் மோகன் லாலுக்கும், மற்றொரு மகள் சுஜாதாவை, நண்பரின் மகனான சீனிவாசனுக் கும் திருமணம் செய்து வைத்தார். இவரது மனைவி ஆனந்தவள்ளி 12 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.
சிறுநீரகக் கோளாறால், ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாலாஜி, நேற்று மாலை 4.40 மணி அளவில், தனது 75வது வயதில் இறந்தார். தகவல் அறிந்த நடிகர்கள் சத்யராஜ், சிவகுமார் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். கோவையில் பிரசாரம் முடித்துவிட்டு வந்த ஜெயலலிதா, விமான நிலையத்திலிருந்து நேராக பாலாஜியின் வீட்டுக்குச் சென்று, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். நடிகர்கள் ரஜினி, சத்யராஜ், சிவகுமார், விஜயகுமார், அஜித், ஜெயம் ரவி நடிகைகள் ஷாலினி, மனோரமா மற்றும் திரையுலக பிரமுகர்கள் பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.