பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தெலுங்கு நடிகர் ராம் - கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்துள்ள நேனு சைலஜா திரைப்படம் ஜனவரி 1ல் திரைக்கு வரவுள்ளது. இயக்குனர் திருமலா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் நகைச்சுவையுடன் கூடிய காதல் கதையம்சம் கொண்ட திரைப்படமாம். இப்படத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிக திரையரங்குகளில் திரையிட திட்டமிட்டுள்ள படக்குழு அமெரிக்காவிலும் அதிக திரையரங்குகளில் வெளியிட முயற்சி மேற்கொண்டு வருகின்றனராம். தெலுங்கு திரைப்படங்கள் அமெரிக்காவில் வசூலை அள்ளுகின்றன.
மகேஷ் பாபு, பிரபாஸ், அல்லு அர்ஜுன், ஜுனியர் என்.டி.ஆர் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரு மில்லியன் டாலர் வரை வசூல் செய்துள்ளன. அந்த வகையில் நேனு சைலஜா திரைப்படமும் அமெரிக்காவில் அரை மில்லியன் டாலர் வசூலையாவது பெறும் என்று நாயகன் ராம் நம்புகின்றாராம். அதனால் அமெரிக்காவில் இப்படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிட ராம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளாராம்.ராமின் நம்பிக்கையை நேனு சைலஜா காபாற்றுமா என்று பொருத்திருந்ததுதான் பார்க்க வேண்டும்.