ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மிர்ச்சி, ஸ்ரீமந்துடு போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் கொரடலா சிவா அடுத்து இயக்கும் படத்தில் ஜுனியர் என்.டி.ஆர் நாயகனாக நடிக்கவுள்ளார். நன்னுக்கு பிரேமதோ படத்தில் நடித்து வரும் ஜுனியர் என்.டி.ஆர் அப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த பின்னர் கொரடலா சிவா இயக்கும் ஜனதா கரகே படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார். இப்படத்தில் ஜுனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்கும் நாயகிக்கான தேர்வு நடைபெற்று வந்தது.
இதில் நடிகை நித்யா மேனன் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. சுதீப் கிஷானுடன் ஒக்க அம்மாயி தப்பா எனும் படத்தில் நடித்து வரும் நித்யா மேனனிடம் இயக்குனர் சிவா ஜனதா கரகே படத்தின் கதையைக் கூறியுள்ளார். நித்யா மேனனும் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகின்றது. விரைவில் இது குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. மைத்திரி மூவீஸ் தயாரிக்கும் இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார் என்பது அறிந்ததே.