ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
டோலிவுட்டின் முன்னணி நடிகர்களான பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா மற்றும் ஜுனியர் என்.டி.ஆரின் படங்கள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு திரைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணா - அஞ்சலி நடித்துள்ள டிக்டேட்டர், நாகார்ஜுனா ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்துள்ள சொக்கடே சின்னி நயன, ஜுனியர் என்.டி.ஆர் ராகுல் ப்ரீத்தி சிங்குடன் ஜோடி சேர்ந்துள்ள நன்னுக்கு பிரேமதோ போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் பொங்கலுக்கு திரைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இப்படங்களுக்கு போட்டியாக சர்வானந்த் நடித்துள்ள எக்ஸ்பிரஸ் ராஜா படமும் பொங்கலுக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் காந்தி இயக்கத்தில் நகைச்சுவை கலந்த சமூக விழிப்புணர்வு திரைப்படமாக உருவாகியுள்ள எக்ஸ்பிரஸ் ராஜா படத்தில் நடிகை சுரபி நாயகியாக நடித்துள்ளார். இப்படம் ஜனவரி 14 ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யுவி கிரியேசன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் பிரவீன் இசையமைத்துள்ளார்.