ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமாவில் காமெடி நடிகையாக ஏராளமான படங்களில் நடித்தவர் சச்சு. ஒரு கட்டத்தில் தான் நடுத்தர வயசை எட்டியபோது அம்மா வேடங்களில் நடித்து வந்த அவர் சமீபகாலமாக பாட்டி வேடங்களில் நடித்து வருகிறார். ஆட்டநாயகன், கெளரவர்கள், தில்லுமுல்லு, நய்யாண்டி என பல படங்களில் பாட்டி வேடங்களில் நடித்த அவர், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மான்கராத்தே திருக்குமரன் இயக்கியுள்ள கெத்து படத்திலும் பாட்டி வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது, காலை 9 மணிக்கு ஸ்பாட்டுக்கு வர வேண்டும் என்று சொன்னால், 8.30 மணிக்கு வந்து நின்றாராம் சச்சு. அதோடு, மேக்கப் போட்டுக்கொண்டு தான் நடிக்க வேண்டிய காட்சியைப்பற்றியும், வசனத்தையும் வாங்கிக்கொண்டு சீரியசாக அதை ரிகர்சல் பார்த்தாராம். மேலும், ஸ்பாட்டில் சில இடங்களில் இன்னும் பர்பாமென்ஸ் கொடுக்க வேண்டும், டயலாக்கை சரி செய்ய வேண்டும் என்றால் அதுபற்றி உடனே டைரக்டரிடம் சொல்லி, இப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்றும் ஆர்வமாக சொன்னாராம்.
இதுபற்றி இயக்குனர் திருக்குமரன் கூறுகையில், சினிமாவில் நடிக்க வந்து 50 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டபோதும் நடிப்பின் மீது சச்சு மேடம் கொண்டுள்ள ஆர்வத்தை பார்த்து கெத்து யூனிட்டை ஆச்சர்யப்பட்டது. குறிப்பாக, சில வசனங்களை இப்படி பேசினால் நன்றாக இருக்கும் என்றதோடு, உடன் நடிப்பவர்களுக்கும் இந்த மாதிரி நடியுங்கள் என்றும் அவர் டிப்ஸ் கொடுத்தார். இன்றைய சினிமா கலைஞர்கள் சச்சு போன்றவர்களிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.