ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் விஷயத்தில் பல குளறுபடிகள் உள்ளது. இதனை களைவதை முதல் வேலையாக கொண்டிருக்கிறது புதிய நிர்வாகம். உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றை கம்ப்யூட்டரில் பதிவு செய்து, உறுப்பினர்களின் பொருளாதாரநிலைக்கு ஏற்ப அவர்களுக்கு உதவ குருதட்சணை என்ற திட்டத்தை நடிகர் சங்கம் துவக்கி உள்ளது. இதன் துவக்க விழா நேற்று நடந்தது.
மூத்த கலைஞர் நடிகர் சிவகுமாரும், நடிகை சச்சுவும் குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தனர். சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பொன்னவண்ணன், நடிகை ரோகினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் நாசர் இதுபற்றி கூறியதாவது: நடிகர் சங்க உறுப்பினர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் தகவல் சேகரிப்பதற்கும் , நடிகர் சங்க உறுப்பினர்களின் நடிப்பு திறனாய்வதற்கும் , ஓய்வூதியம் வழங்குவதற்கும், தகவல் சேகரிப்பதற்காகவும் இதனை நடத்துகிறோம். முதற்கட்டமாக நடிகர் சங்க உறுப்பினர்களின் நடிப்பு திறனை ஆராயும் வகையில், நடிப்பு திறனை ஆராயும் திட்டம் சென்னையில் உள்ள உறுப்பினர்களுக்காக இன்று துவங்கியது. மேலும் இது ஒவ்வொரு கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெறும்.
நாடக நடிகர்களின் வாழ்க்கை சூழல் மிக மோசமாக உள்ளதை நாங்கள் தேர்தல் சுற்றுப்பயணத்தின் போது கண்டோம். அதை போக்குவதுதான் முதல் வேலை. இந்த பணிகள் முடிந்து முழுமையான உறுப்பினர்கள் பட்டியல் தயாரானதும். அவர்களுக்கு உதவும் பணி தொடங்கும், நீக்கப்பட்ட உறுப்பினர்கள் எதற்காக நீக்கப்பட்டார்கள் என்பதை ஆராய்ந்து மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இந்த பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு மார்ச் மாதம் முதல் புதிய உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றார்.