வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
நடிகை தமன்னா தனது 26 வது பிறந்த நாளை தோழா படப்பிடிப்பில் கொண்டாடினார். படப்பிடிப்பு குழுவினரின் மத்தியில் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு கார்த்தி, நாகார்ஜுனா ஆகியோர் கேக் ஊட்டி வாழ்த்தினர். படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், கேமராமேன் உள்ளிட்ட பட யூனிட்டை சேர்ந்தவர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 2016ம் ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமைய வேண்டும் என்று கார்த்திக் கூறினார். அதற்கு தமன்னா உங்களுக்கும்தான் என்று பதிலளித்தார்.
மும்பையை சேர்ந்த தமன்னா கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். கல்லூரி படம் நல்ல நடிகையாக அடையாளம் காட்டியது. படிக்காதவன் படம் அவரை கமர்ஷியல் ஹீரோயினாக உயர்த்தியது. அதன் பிறகு பையா, அயன், கண்டேன் காதலை, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, கோ படங்களில் நடித்தார். இங்கு நன்றாக போய்கொண்டிருந்தபோது திடீரென இந்திப் படங்களில் கவனம் செலுத்த அங்கும் ஜெயிக்க முடியவில்லை. இங்கும் விட்ட இடத்தை பிடிக்கமுடியவில்லை. பாகுபலி படத்தின் மூலம் தன் இடத்தை மீண்டும் பிடித்தார். தர்மதுரை, தோழா படங்கள் மூலம் தன் பயணத்தை தொடங்கி விட்டார்.