வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
இயக்குனர் ராஜமௌலியின் பிரம்மாண்ட இயக்கத்தில் ரூ 200 கோடி செலவில் எடுக்கப்பட்ட பாகுபலி திரைப்படம் உலகம் முழுவதும் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் என பல மொழிகளில் வெளிவந்து ரூ.650 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்தது. பிரபாஸ், ராணா அனுஷ்கா, தமன்னா,ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். திரை உலகில் பல சாதனைகள் புரிந்துள்ள பாகுபலி படம் சமூக வலைதளத்திலும் தனது சாதனையை நிகழ்த்தியுள்ளது. பாகுபலி படத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 1,50,000-ஐ கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பிற்கு பாகுபலி படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. பாகுபலி தி கன்குலுசன் என்ற பெயரில் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை ராஜமௌலி துவக்கிவிட்டார். விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்புகளும் துவங்கவுள்ளன.