விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
தமிழில் உள்ள மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர் என பெயர் எடுத்துள்ளவர் விக்ரம். இந்த ஆண்டில் வெளிவந்த 'ஐ' படத்தில் அவருடைய நடிப்பின் மூலம் அனைவரையும் மிரட்டியிருந்தார். நடிப்புக்காக உடஎல் எடையை 50 கிலோவுக்குக் கீழ் குறைத்தும் 100 கிலோவுக்கு மேல் ஏற்றியும் மூன்று விதமான தோற்றத்தில் நடித்திருந்தார். மருத்துவர்களே அப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று எச்சரித்தும் அவர் அந்தப் படத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். 2015ம் ஆண்டின் சிறந்த நடிகர்களின் விக்ரமை யாராலும் மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. மற்றவர்கள் எல்லாம் வெற்றியை மட்டும் கொடுக்க, விக்ரம் மட்டுமே கடும் உழைப்பைக் கொடுத்திருந்தார்.
தமிழில் முன்னணி நடிகராக வருவதற்கு முன் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் நடித்தவர் விக்ரம். தமிழில் சாதாரண நடிகராக இருக்கும் போது அப்போது முன்னணியில் இருந்த சில நடிகர்களுக்கு டப்பிங்கும் கொடுத்தவர்தான் விக்ரம். 1999ல் வெளிவந்த 'சேது' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தமிழில் முன்னணி இடத்துக்கு உயர்ந்தார். தமிழைத் தவிர்த்து நடுவில் 'ராவண், டேவிட்' ஆகிய இரண்டு ஹிந்திப் படங்களில் மட்டுமே நடித்தார். தெலுங்கில் 2001ல் வெளிவந்த 'யூத்' படத்திலும், மலையாளத்தில் 2000-ல் வெளிவந்த 'இந்திரியம்' படத்திலும் நடித்திருந்தார். அதன் பின் தெலுங்கு, மலையாளத்தில் நடிக்கவில்லை.
சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டவர் மீண்டும் நேரடித் தெலுங்குப் படத்தில் நடிக்கும் ஆசையை வெளியிட்டுள்ளார். சில இயக்குனர்களிடம் கதை கேட்டுக் கொண்டிருப்பதாகவும், அது முடிவானதும் விரைவில் தெலுங்குப் படத்தில் நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.