ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கன்னிப்பருவத்திலே, அந்த 7 நாட்கள் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் ராஜேஷ். சில படங்களில் ஹீரோவாக நடித்தபோதும், பல படங்களில் குணசித்ர நடிகராகவே நடித்திருக்கிறார். சமீபகாலமாக சித்து ப்ளஸ்-2, ஜன்னல் ஓரம், திருடன் போலீஸ் போன்ற படங்களில் அப்பா வேடம் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தார். அதோடு இந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில்தான் நடிப்பேன் என்று சொல்லாமல் கிடைக்கிற வாய்ப்புகள் எதையும் தவிர்க்காமல் நடித்து வருகிறார் ராஜேஷ்.
மேலும், சினிமா சம்பந்தமாக சில புத்தகங்களையும் எழுதியிருக்கிறார் அவர். அதன்காரணமாக உலக சினிமாக்களைப்பற்றி தெளிவாக தெரிந்து வைத்திருக்கும் ராஜேஷ், தான் நடிக்கும் படங்களின் இளவட்ட டைரக்டர்களிடம் சினிமாவைப் பற்றி நிறைய விசயங்களை சொல்லிக்கொடுத்து அவர்களுக்கு பேருதவியாய் இருந்து வருகிறார். இதனால் பெரும்பாலும் மதியே இடைவேளை நேரங்களில் அவர் ஓய்வெடுத்து வரும்போது, அவரை அணுகும் உதவி இயக்குனர்கள், உலக சினிமா குறித்த தங்களது சந்தேகங்களை அவர் முன்பு வைத்து அறிய தகவல்களை சேகரித்து வருகிறார்கள்.