ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கன்னட நடிகரான நிகில் குமாரின், 'ஜாகுவார்' திரைப்படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. சமீபத்தில் அதன் துவக்க விழா நிகழ்ச்சி கண்டிரவா உள்விளையாட்டு அரங்கில் மிகவும் சிறப்பாக நிகழ்ந்தது. முன்னாள் கர்நாடக முதலமைச்சரான குமாரசுவாமியின் மகனான நிகில் குமாரின் விழாவிற்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ராஜமௌலியின் உதவி இயக்குனரான மகாதேவ் இந்த படத்தை இயக்கி வருகிறார். சென்னாம்பிகா என்ற சொந்த பட தயாரிப்பு நிறுவனமே நிகிலின் இந்த படத்தை தயாரித்து வருகிறது.
இந்திய அளவில் படத்தை பேச வைக்க வேண்டும் என எண்ணிய படக்குழுவினர் ஒரு பாடலுக்கு ஆடும்படி பாலிவுட் நடிகை கத்ரினா கைஃபை அணுகி வருகின்றனர். தென்னிந்தியாவின் பெரும் படங்கள் பல, கத்ரினா கைஃப்பிற்கு வலைவீசியும் சிக்காத கத்ரினா இந்த படத்திற்கு சம்மதம் தெரிவிப்பாரா என்று திரையுலகமே எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.