அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
விமல், நந்திதா, பசுபதி நடித்துள்ள படம் அஞ்சல, சண்டை இயக்குனர் திலீப் சுப்பராயன் தயாரித்துள்ளார். தங்கம் சரவணன் இயக்கி உள்ளார், கோபிசுந்தர் இசை அமைத்துள்ளார். இந்த படம் ஒரு டீக்கடையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அதனால் டீ போடு என்ற தலைப்பில் ஒரு புரமோசன் பாடலை சமீபத்தில் வெளியிட்டனர். இதில் முன்னணி நட்சத்திரங்கள் விதவிதமாக டீ குடிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இது நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இதற்கிடையில் "இந்த பாடலின் கான்செப்ட் நாங்கள் 2013ம் ஆண்டு வெளிட்ட தம் டீ என்ற ஆல்பத்திலிருந்து திருடப்பட்டுள்ளது" என்கிறார்கள் மாமிபாய்ஸ் என்ற இசைக்கு குழுவினர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சிங்கப்பூரைச் சேர்ந்த இசையமைப்பாளர் கிரிஷ்செனோ அவரது சென்னை நண்பர்கள் மற்றும் பாடகர்களாகிய கேலப் ஜேக்கப் மற்றும் கெவி ஜே ஆகியோருடன் இணைந்து உருவாக்கியதுதான் மாமிபாய்ஸ் எனும் இசைக்குழு. ஹாரிஸ் ஜெயராஜ், ஸ்ரீகாந்த் தேவா போன்ற தமிழ் தெலுங்கு இசையமைப்பாளர்களுடன் இணைந்து திரைப்பட பாடல்களில் பங்கெடுத்திருக்கிறோம். முதன்முதலில் உலகக் கோப்பைக் கிரிக்கெட்டுக்காக சலோ இந்தியா எனும் எங்கள் தனிப்பாடல், நார்வே சர்வதேச படவிழாவில் விருதுப்பெற்ற படமான ரோடு சைடு அம்பானியில் இடம்பெற்றது. இது மட்டும் இன்றி பல பல சர்வதேச இசைபோட்டியிலும் எங்கள் குழு கலந்து கொண்டுள்ளது.
2013ல் தம் டீ எனும் ஆல்பத்தை சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் வெளியிட்டோம். இது இணைய தளத்தில் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் எங்கள் தம் டீ பாட்டின் கான்செப்டை திருடி தங்கம் சரவணன் இயக்கியுள்ள அஞ்சல படத்தில் டீ போடு பாடலாக வெளியிட்டுள்ளனர் . டீ போடு பாடலையும் விடியோவையும் பார்த்து அதிர்ந்தோம். அப்படியே தம் டீ கான்செப்ட். எங்கள் தம் டீ விடியோவில் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் அஞ்சல டீ போடு வீடியோவில் உள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் செல்ல முடிவு செய்திருக்கிறோம். என்கிறார்கள் மாமிஸ்பாய்ஸ் இசை குழுவினர்.