தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சர்ச்சைகளுக்கு பெயர் போன டோலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மா சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் கில்லிங் வீரப்பன். இப்படத்தின் டிரைலர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படத்தில் டில்லியைச் சேர்ந்த நாடக நடிகர் சந்தீப் வீரப்பனாக நடிக்கின்றார். பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் வீரப்பனைப் பிடிக்கும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். வீரப்பனின் மனைவியான முத்துலட்சுமி வேடத்தில் நடிகை யங்னா ஷெட்டி நடித்துள்ளார். கன்னட மற்றும் தெலுங்கில் ஜனவரி 1 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போலீசாருக்கு இப்படத்தை திரையிட்டுக் காட்டும் பணிகளில் ராம் கோபால் வர்மா மும்முரமாக இறங்கியுள்ளார். இதனை டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். ராம் கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் 1200 போலீசாருக்கு கில்லிங் வீரப்பன் படத்தை திரையிட்டுக் காட்ட ஏற்பாடு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.