‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தமிழில் இந்த ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படங்களில் 'தனி ஒருவன்' படமும் அதிகம் குறிப்பிட வேண்டிய படம். மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி மற்றும் பலர் நடித்த இந்தப் படம் அனைத்து எதிர்பார்ப்புகளையும் மீறி மாபெரும் வெற்றி பெற்றது.
இந்தப் படத்தை தெலுங்கில் ராம் சரண் நடிக்க சுரேந்தர் ரெட்டி ரீமேக் செய்ய உள்ளார். ராம்சரணின் குடும்ப நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் இப்படத்தைத் தயாரிக்க உள்ளார்கள். அரவிந்த்சாமி கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என படக்குழுவினர் யோசித்து வந்தார்கள். கடைசியில் அரவிந்த்சாமியே நடித்தால் சிறப்பாக இருக்கும் என முடிவு செய்து அவரை அணுகினார்கள். பலத்த யோசனைக்குப் பிறகு அக்கதாபாத்திரத்தில் நடிக்க அரவிந்த்சாமியும் சம்மதம் தெரிவித்தார்.
அடுத்து ராம்சரணுக்கு ஜோடியாக யாரை நடிக்க வைப்பது என்ற தேடலில் இறங்கினார்கள். முன்னணி நடிகை யாராவது நடித்தால் மட்டுமே அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருக்கும் என்ற தேடலில் ஸ்ருதிஹாசன் முடிவு செய்யப்பட்டுவிட்டார் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கில் 'பிரேமம்' ரீமேக்கிலும், தமிழில் 'சிங்கம் 3' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஹிந்தியிலும் சில படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.
'எவடு' படத்திற்குப் பிறகு மீண்டும் ராம்சரணுடன் ஸ்ருதிஹாசன் நடிக்கும் படம் இது. பிப்ரவரி 2016ல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.