மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
த ராக் என்று உலக குத்துச்சண்டை ரசிகர்களால் அழைக்கப்படும் ஹாலிவுட் ஹீரோ டுவானே ஜான்சன் சில வாரங்களுக்கு முன்பு தனக்கு பெண் குழந்தை தான் பிறக்கும் என்று இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார், மேலும் அதில், பெண் குழந்தை தான் பெருமை என்றும், எனக்கு பெண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என்றும் அவர் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது ஆசை, கணிப்பு தற்போது நிஜமாகி போனது. ஆம், மீண்டும் பெண் குழந்தைக்கு தந்தையானார் டுவானே ஜான்சன். டுவானே ஜான்சனின் இரண்டாம் மனைவியான லாரன் ஹசியானுக்கு கடந்த புதன் கிழமை அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் புது பெண் குழந்தையுடன் இன்ஸ்டாகிராமில் செல்பி எடுத்து போடுங்க ராக்!