'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ராதிகா மற்றும் பலர் நடிக்கும் 'தர்மதுரை' படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 'இடம் பொருள் ஏவல்' படத்திற்குப் பிறகு மீண்டும் சீனு ராமசாமி - வைரமுத்து - யுவன்ஷங்கர் ராஜா' கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளது.
'நானும் ரௌடிதான்' படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதியின் அம்மாவாக ராதிகா இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு கிராமத்து அம்மாவாக ராதிகா இந்தப் படத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு புகைப்படங்களில் சில வெளியாகி ராதிகாவை 'கிழக்குச் சீமையிலே' படத்தில் பார்த்ததைப் போல இருக்கிறது என பலரும் பாராட்டி வருகிறார்கள்.
படப்பிடிப்பு நடக்கும் தளத்தில் இப்படத்தின் பாடலாசிரியரான வைரமுத்துவும், நடிகர் பாபி சிம்ஹாவும் சென்றுள்ளனர். அவர்கள் வருகை குறித்து தெரிவித்து தன்னுடைய டிவிட்டரில் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ள ராதிகா “இந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் சீனு ராமசாமியும், வைரமுத்துவும், விஜய் சேதுபதியும் வற்புறுத்தியதாலேயே நடிக்கிறேன், அவர்களுடைய நம்பிக்கை என்னை பாதித்தது,” என்று குறிப்பிட்டுள்ளார்.