Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் உத்தமன்: ராமநாராயணன்

16 மே, 2011 - 12:52 IST
எழுத்தின் அளவு:

 தயாரிப்பாளர் சங்க தலைவராக நான் இருந்தபோது என்னுடைய பதவிகாலத்தில் நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் தேவையில்லாமல் என் மீது பழிசுமத்துகின்றனர். இதுகுறித்து தற்போதைய தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர் விசாரித்து உண்மையை நிலை நாட்ட வேண்டும் என்று ராமநாராயணன் கூறியிருக்கிறார்.

சட்டசபை தேர்தலில் தி.மு.க., படு தோல்வியடைந்த பின்னர் தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்கதலைவர் பதவியை திடீரென ராமநாரயணன் ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்ததையடுத்து தயாரிப்பாளர் சங்கதலைவர்கள் அவசரக்கூட்டம் கூடியது. அதில் ராமநாரணயன் ரூ.20கோடிக்கு மேல் ஊழல் செய்ததாகவும், திமுக.,வின் கைகூலியாகவும், சங்கத்தை ரவுடிகளின் கூடாரமாகவும்  ராமநாரயணன் மாற்றிவிட்டதாகவும் அடுக்கடுக்காக புகார் எழுந்தது. மேலும் புதிய தலைவராக விஜய்யின் அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரை தேர்ந்தெடுத்தனர்.

இதனிடையே தன்மீதான புகார் அர்த்தமற்றது, நான் எப்பவும் உண்மையாக நடந்து கொண்டுள்ளேன் என்று ராமநாரயணன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தயாரிப்பாளர் சங்க தலைவராக நான் ஐந்து வருடங்களாக பணியாற்றி வருகிறேன். என்னுடைய பதவிகாலத்தில் நான் உண்மையாகவும், நேர்மையாவுகம் நடந்து கொண்டேன். இது சங்கத்தில் இருக்கும் மற்ற உறுப்பினர்களுக்கும் தெரியும். 120 சிறு முதலீட்டு படங்களில் பணியாற்றிய நான் எளிமையே வலிமை என்ற உணர்வோடு வாழ்ந்து வருபவன். எந்த காலத்திலும் திரை உலகில் நான் யாருக்கும் பாக்கி வைத்ததில்லை. நேர்மை தவறியதில்லை. இது திரை உலகில் நான் பணியாற்றிய ஏவிஎம், கே. பாலச்சந்தரின் கவிதாலயா போன்ற பெரிய நிறுவனங்களுக்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் தெரியும்.

உத்தமனாக நடந்து கொண்ட என்னை, ரூ.20 கோடி ஊழல் செய்ததாக பொய்யான புகார் கூறியிருக்கின்றனர் முன்னாள் தலைவர்களும் மற்ற உறுப்பினர்களும். வரவு-செலவு கணக்குகளை சங்கத்தின் ஒவ்வொரு மாதமும் ஆடிட்டர் மூலம் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. இதை மினிட்ஸ் புத்தகத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். புதிய தலைவராக பதவி‌யேற்றுள்ள எஸ்.ஏ.சந்திரசேகர் தான் தீவிர விசாரித்து உண்மையை கண்டறிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (18) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (18)

30 மே, 2011 - 00:54 Report Abuse
 தமிழ் சினிமாகாரன் கடந்த 5 ஆண்டுகளில் அதிக மொழிமாற்று ( Dubbing ) திரை படங்களை தயாரித்த தலைவர் ... உள்ளூர் திரை படங்களை வெளியிட உதவாமல் .. கலைஞர் டிவி கும் / SUN டிவி கும் விலை பேசிய வியாபாரி ... நீ ஒன்றும் செய்யவில்லை இந்த தமிழ் சினிமா வளர .. இன்னும் நடிகர் நடிகைகளை மிரட்டிய மிரஷு .. இன்று ஒன்னும் பண்ணல... என்ன வெக்கம் இல்லா அறிவிப்பு.. !!! ராம நாராயணா . அந்த ராமனுக்கே அடுக்காதுப்பா !!!
Rate this:
ஜெயதேவ் தாஸ். - Bengalooru,இந்தியா
17 மே, 2011 - 19:38 Report Abuse
 ஜெயதேவ் தாஸ். உன் நண்பனைப் பற்றிச் சொல், உன்னைப் பற்றி நான் சொல்கிறேன் என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு. உன்னோட சேர்க்கையே சரியில்ல, உன்னை எப்படி நம்புறது ராசா? கருணாநிதி லட்சம் கோடி அடிச்சாரு , நீ இருபது கோடி கூட அடிச்சிருக்க மாட்டியா ? அதை நாங்க நம்பனுமா?
Rate this:
Jagadish - Coimbatore,இந்தியா
17 மே, 2011 - 18:05 Report Abuse
 Jagadish உத்தமன் அப்படி என்றால்... you should continue in the post..why you resigned..by saying reasons!
Rate this:
மான் - Zurich,சுவிட்சர்லாந்து
17 மே, 2011 - 09:51 Report Abuse
 மான் Thiru.ராமநாராயணன் அவர்கள் மிகவும் புத்திசாலி தனமாக முடிவெடுத்திருக்கிறார். ஏன் என்றால் இப்போது அவர் குடும்பத்தை பாதுகாத்து கொள்ளவேண்டும் இல்லையா அதனால் தான். இது நாள் வரை கூடி கும்மி அடித்தது போன்ற சேட்டைகள் இந்த ஆட்சியில் நடக்காது என்று தெரிந்து விட்டது அவருக்கு. எப்பொழுதும் நேர்மையாக இருப்பவர்களுக்கு பயம் எதுவும் வேண்டாம்.
Rate this:
vangatesan - singapore,இந்தியா
17 மே, 2011 - 09:14 Report Abuse
 vangatesan ha ha ha
Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in