Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் இணைந்த ஜி.வி.பிரகாஷ் குமார் - ஆனந்தி

15 டிச, 2015 - 16:31 IST
எழுத்தின் அளவு:
GV-Prakash---Anandhi-to-team-up-again

'கத்தி' படத்தை தயாரித்த 'லைகா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தமிழ்ப்பட தயாரிப்பில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. கத்தி படத்தைத் தயாரித்த பிறகு வேறு படத்தை தயாரிக்காமல் இருந்த லைகா நிறுவனம் அண்மையில் தனுஷ் தயாரித்த நானும் ரௌடிதான் படத்தை வாங்கி வெளியிட்டது. வேறு சில படங்களையும் வாங்கி வெளியிட உள்ளதோடு, இன்னொரு பக்கம் தொடர்ந்து பல படங்களை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'எந்திரன்-2' படத்தை பிரம்மாண்டமான முறையில் இந்நிறுவனம்தான் தயாரிக்கிறது.


இந்தப் படத்தை வெளியிட்ட பிறகு கமல் நடிக்கும் மருதநாயகம் படத்தையும் லைகா தயாரிக்க உள்ளது. இப்படங்கள் தவிர, ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது! இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. ஜி.வி.பிரகாஷ்குமாரை வைத்து 'டார்லிங்' படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இப்படத்தை இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார். 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஆனந்தி இருவரும் இணைந்து நடித்தனர். அப்படத்தின் வெற்றி சென்ட்டிமென்ட் காரணமாக மீண்டும் ஆனந்தியை கதாநாயகியாக நடிக்க வைத்திருக்கிறார்கள்.



Advertisement
சிம்புவுக்கு எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரின் 'நறுக்' கண்டிப்புசிம்புவுக்கு எழுத்தாளர் ... பீப் பாடல்: டி.ராஜேந்தரும்.... ஒய்.ஜி.மகேந்திரனும்...! பீப் பாடல்: டி.ராஜேந்தரும்.... ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Karu
    • கரு
    • நடிகை : சாய் பல்லவி
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Pariyerum perumal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in