அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கும்கி, இவன் வேற மாதிரி என வருடம் ஒரு படத்தில் நடித்து வந்த விக்ரம் பிரபு, அதன்பிறகு தனது வேகத்தை அதிகப்படுத்தி வருடத்திற்கு மூன்று படங்களை கொடுக்கத் தொடங்கினார். அந்த வகையில், அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளைக்கார துரை, இது என்ன மாயம் படங்களைத் தொடர்ந்து இப்போது வாகா, வீர சிவாஜி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதோடு, படத்துக்குப்படம் தன்னை மாறுபட்ட கோணங்களில் வெளிப்படுத்தி வரும் விக்ரம்பிரபு, நடிப்பிலும் படத்துக்குப்படம் மெருகேறிக்கொண்டே வருகிறார்.
அந்த வகையில், தற்போது ஜி.என்.ஆர். குமரவேல் இயக்கி வரும் வாகா படத்தில், இந்திய ராணுவத்தில் உள்ள ஒரு இளைஞனுக்கும், பாகிஸ்தானைச்சேர்ந்த ஒரு பெண்ணுக்குமிடையே நடக்கும் காதலை மையப்படுத்திய கதையில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்காக வாகா பார்டரில் ஸ்பெசல் அனுமதி பெற்று விக்ரம் பிரபு-ரன்யா சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படம் பற்றி டைரக்டர் ஜி.என்.ஆர்.குமாரவேல் மேலும் கூறுகையில், வாகா படம் வித்தியாசமான கதைக்களம் மட்டுமின்றி, இதுவரை ரசிகர்கள் கண்டிராத லொகேசன்களில் படமாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ரொமான்ஸ் காட்சிகள் அதிக ஈர்ப்புடையதாக இருக்கும். இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்து விட்டது. இன்னும் ஏழு நாட்கள் மட்டுமே பாக்கி உள்ளது. இந்த மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும். அதனால் ஜனவரி மாதம் இறுதியில் வாகா படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்கிறார்.