இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பிறகு காமெடியனாக பிரபலமான டாக்டர் சீனிவாசன், தொடர்ந்து சந்தானத்துடன் இணைந்து காமெடியனாக நடித்து மேலும் புகழ் பெற விரும்பினார். ஆனால், சந்தானம் அவரை சில படங்களோடு கழட்டி விட்டார். அதோடு வேறு காமெடியன்களும் அவருடன் கூட்டணி வைத்துக்கொள்ளாததால் பின்னர் தனி காமெடியனாக நடித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் சீனிவாசன்.
அதனால் தற்போது மாங்கா, வாலிபராஜா, வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்கய்யா, நாரதன், சவுகார் பேட்டை, மகுடி, மோகனா, உள்பட பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். இதில் வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்கய்யா என்ற படத்தில் முதலமைச்சர் வேடத்தில் நடிக்கிறார் சீனிவாசன். அதனால் சில மாஜி முதல்வர்கள் அணிவது போன்ற கெட்டப்பில் நடித்துள்ள அவர், அரசியல்ரீதியாக சில அதிரடி முடிவுகள் எடுத்து பின்னர் எப்படியெல்லாம் பிரச்னைகளில் சிக்கிக்கொள்கிறார் என்பதை காமெடியாக படமாக்கியிருக்கிறார்களாம்.
இதேபடத்தில் டைரக்டர் கே.பாக்யராஜ் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். கதைப்படி அவர்தான் முதலமைச்சரான டாக்டர் சீனிவாசனுக்கு பாதுகாப்பு கொடுக்கிறாராம். ஆக, இந்த படத்தில் சீனிவாசனுடன் இணைந்து பாக்யராஜூம் செம காமெடி செய்திருக்கிறாராம்.