வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
நடைபெற்று முடிந்த கேரளா சர்வதேச திரைப்பட விழாவில் (IFFK) போட்டிப்பிரிவில் கலந்துகொண்ட படங்களில் இயக்குனர் ஜெயராஜின் 'ஓட்டல்' படம் நடுவர்களின் தீர்ப்புப்படி தங்க காகம் (Golden Crow) விருதையும், ரொக்க தொகை ரூபாய் ஐந்து லட்சத்தையும், பார்வையாளர்கள் ஓட்டெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கும் முறைப்படி வெள்ளி காகம் (Silver Crow) விருதையும் ரொக்கத்தொகை ரூபாய் இரண்டு லட்சத்தையும் பெற்றுள்ளது. இந்தப்படம் ஏற்கனவே சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதையும், கேரள அரசு வழங்கிய சிறந்த படத்துக்கான விருதையும் பெற்ற பெருமைக்குரிய படம் தான்.
தமிழில் 'அன்னக்கிளி நீ வாடி' மற்றும் 'லஜ்ஜாவதியே' என இரண்டு சூப்பர்ஹிட் பாடல்களை தந்த சூப்பர்ஹிட் படமான '4 ஸ்டூடன்ஸ்' படத்தின் இயக்குனர் ஜெயராஜ் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்திற்கு பார்வையாளர்கள் மத்தியிலும் சர்வதேச திரைப்பட வல்லுனர்கள் மத்தியிலும் இவ்வளவு வரவேற்பு கிடைக்க காரணம், இந்தப்படம் சுற்றுச்சூழலை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது என்பதுதான். அதுமட்டுமல்ல குழந்தை தொழிலாளர்களின் அவல நிலையையும் அப்பட்டமாக படம்பிடித்து காட்டியுள்ளதாம் இந்தப்படம்.