ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஒரு பக்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்து கொண்டு மறுபக்கம் தங்களது வேலைகளையும் திரையுலகினர் பார்த்து வருகிறார்கள். கடந்த இரண்டு வாரங்களாகவே தியேட்டர்களும், படப்பிடிப்புகளும் முடங்கிப் போன நிலையில் கடந்த சில நாட்களாக அவை மீண்டும் புத்துயிர் பெற்று வருகின்றன.
தனுஷ் நடித்து விரைவில் வெளிவர உள்ள 'தங்கமகன்' படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதற்குள் 5 லட்சம் பார்வையாளர்களை அந்த டிரைலர் பெற்றுள்ளது.
இந்த நிலையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் அடுத்து நடிக்க உள்ள புதிய படத்தின் பூஜை இன்று எளிமையாக நடைபெற்றுள்ளது. இப்படத்தில் தனுஷ் ஜோடியாக முதல் முறையாக த்ரிஷா, ஷாம்லி ஆகியோர் நடிக்க உள்ளனர். படத்திற்கு 'கொடி' என பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னையில் நடைபெறுகிறது.