ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
டோலிவுட்டில் நடிப்பு சமூக சேவை என பிசியாக சுற்றித்திரியும் இளம் நடிகர் மஞ்சு விஷ்ணு தற்போது இயக்குனர் கார்த்திக் ரெட்டி இயக்கும் சரட எனும் படத்தில் நாயகனாக நடித்து வருகின்றார். இப்படத்தில் நயாகியாக நடிகை சோனாரிக்கா நடிக்கின்றார். காதலை ஆக்ஷன் கலந்து சொல்லவிருக்கும் இப்படத்தை டி.குமார் மற்றும் கேஷவராவ் இணைந்து தாயாரிக்கின்றனர். இப்படத்திற்கு பின்னர் மஞ்சு விஷ்ணு அடுத்து நடிக்கவிருக்கும் படத்திலும் சோனாரிக்காவே நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இயக்குனர் நாகேஷ்வர ரெட்டி இயக்கவிருக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க மஞ்சு விஷ்ணு சம்மதம் தெரிவித்துள்ளாராம். இப்படத்தில் நாயகியாக நடிக்க, அனேகன் பட நாயகி அமைரா தஸ்தூரிடம் கேட்க இயக்குனர் நாகேஷ்வர ரெட்டி திட்டமிட்டிருந்தாராம். ஆனால் மஞ்சு விஷ்ணுவுடன் இணைந்து சோனாரிக்கா நடித்த சரட படத்தின் காட்சிகளைப் பார்த்து சோனாரிக்காவையே மஞ்சு விஷ்ணுவிற்கு ஜோடியாக்கிவிட்டாராம். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.