'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள 'பிரேமம்' படத்தின் தெலுங்கு ரீமேக் 'மஜ்னு' என்கிற பெயரில் உருவாகிவருகிறது. இதில் சாய்பல்லவி நடித்த மலர் கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். கதாநாயகனாக நாக சைதன்யா நடிக்கிறார். சமீபத்தில் 'மஜ்னு' ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஸ்ருதிஹாசனின் சில ஸ்டில்கள் எப்படியோ சோஷியல் மீடியா மூலம் லீக்காகின.. இதில் ஸ்ருதியின் கெட்டப்பை பார்த்த ரசிகர்கள் பலர், பிரேமம் படத்தில் தாங்கள் பார்த்த மலர் டீச்சரை ஸ்ருதியிடம் காணமுடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அதனால் நெட்டில் மீம்ஸ்களாக போட்டு ஸ்ருதிஹாசனை கலாய்த்து வருகின்றனர்...
இந்த தகவலை கேள்விப்பட்ட ஸ்ருதிஹாசன் சோஷியல் மீடியாவில் தன்னை பற்றி வெளியான கலாய்ப்புகளை பார்த்துவிட்டு, ”இப்படி எல்லாம் புகைப்படங்கள் வெளியாவதும் கமெண்ட்டுகள் வருவதும் என் கேரக்டரை எந்தவிதத்திலும் பாதிக்காது” என கூறியுள்ளார். மேலும், “இந்த கேரக்டர் எனக்கு நீண்டநாட்கள் கழித்து கிடைத்துள்ள அருமையான ஒன்று. காரணம் இதில் வழக்கமான கிளாமர், மசாலா எதுவும் இல்லை. இது ரொம்பவே புதுசு. நான் இந்த மலர் கேரக்டரை சிறப்பாக வெளிப்படுத்துவேன்” என கூறியுள்ளாராம். நெட்டிசன்கள் கூச்சலிட்டால் மாத்திரம் கதாநாயகியை மாற்றவா போகிறார்கள்..?