டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜா மற்றும் தமன்னா ஜோடி சேர்ந்துள்ள பெங்கால் டைகர் திரைப்படம் டிசம்பர் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ராதா மோகன் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குனர் சம்பத் நந்தி இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் பீம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார். இப்படத்தின் புரமொஷனுக்காக கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து வரும் படக்குழுவினர் இப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்கும் பிரம்மானந்தத்தின் புகைப்படத்தை வெளியிட்டு அமலாபால் என அறிமுகப்படுத்தியுள்ளனர். அமலாபால் என்ற பெயரில் பிரம்மானந்தம் இப்படத்தில் நடித்துள்ளாராம். பிரம்மானந்தத்தின் இப்புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சங்கர் தாதா ஆர்.எம்.பி, கான் தாதா, பிகே, போன்ற கதாபாத்திரங்களில் ரசிகர்களைச் சிரிக்க வைத்த பிரம்மானந்தம் அடுத்ததாக அமலா பால் எனும் கதாபாத்திரத்தில் சிரிக்க வைக்க வருகின்றார்.