ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'கிராவிட்டி' படத்தின் மூலம் உலக புகழ் பெற்ற ஆஸ்கர் நாயகி சான்ட்ரா புல்லக், லைலா எனும் மூன்றரை வயது பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார். ஏற்கனவே லூயிஸ் என்ற ஆண் குழந்தையை சான்ட்ரா 2010ம் ஆண்டு தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
பிறந்தது முதல் காப்பகத்தில் வளர்ந்து வரும், லைலாவை சான்ட்ரா பார்த்த போது, இந்த குழந்தையையும் நாம் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாம். அதனை அடுத்து லைலாவை தத்தெடுத்துள்ளார்.
லைலாவிற்கு சான்ட்ரா இன்னும் பழக்கமாகவில்லையாம், அதனால், முதலில் அண்ணனான லூயிசிடம் தங்கையை பழக விடுகின்றார். சினிமாவில் பிசியாக இருந்தாலும் எனது குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பது தான் எனக்கு முக்கியம் என்று தாயுள்ளம் கொண்டு சொல்கிறார் புல்லக்.